Sunday, December 29, 2024

Ayarpaadi Maaligaiyil Lyrics Tamil | ஆயர்பாடி மாளிகையில்

ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்

மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ

ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்

மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ

அவன் வாய் நிறைய மண்ணை உண்டு 

மண்டலத்தை காட்டியதில் ஓய்வெடுத்து தூங்குகின்றான் ஆராரோ 

ஓய்வெடுத்து தூங்குகின்றான் ஆராரோ

ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்

மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ

பின்னலிட்ட கோபியரின் கன்னத்திலே கன்னமிட்டு

மன்னவன் போல் லீலை செய்தான் தாலேலோ

பின்னலிட்ட கோபியரின் கன்னத்திலே கன்னமிட்டு

மன்னவன் போல் லீலை செய்தான் தாலேலோ

அந்த மந்திரத்தில் அவன் உறங்க மயக்கத்திலே இவன் உறங்க

மண்டலமே உறங்குதம்மா ஆராரோ

மண்டலமே உறங்குதம்மா ஆராரோ

ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்

மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ

நாகபடம் மீதில் அவன் நர்த்தனங்கள் ஆடியதில்

தாகமெல்லாம் தீர்த்துகொண்டான் தாலேலோ 

அவன் மோகநிலை கூட ஒரு யோகநிலை போலிருக்கும்

யாரவனை தூங்கவிட்டார் ஆராரோ

யாரவனை தூங்கவிட்டார் ஆராரோ

ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்

மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ

கண்ணனவன் தூங்கிவிட்டால் காசினியே தூங்கிவிடும்

அன்னையரே துயிலெழுப்ப வாரீரோ

கண்ணனவன் தூங்கிவிட்டால் காசினியே தூங்கிவிடும்

அன்னையரே துயிலெழுப்ப வாரீரோ

அவன் பொன்னழகை காண்பதர்க்கும் 

போதை முத்தம் பெறுவதற்கும்

கன்னியரே கோபியரே வாரீரோ

கன்னியரே கோபியரே வாரீரோ

ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்

மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ(2)

No comments:

Post a Comment

Popular Post