பள்ளிக்கட்டு சபரிமலைக்கு வந்தோமப்பா ஐயப்பா
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை கண்டோமப்பா ஐயப்பா
கன்னிசாமி புதுசா மலையேறும் நாளப்பா
கருப்பு சட்டை போட்ட ஆத்திகன் நானப்பா
கன்னிசாமி புதுசா மலையேறும் நாளப்பா
கருப்பு சட்டை போட்ட ஆத்திகன் நானப்பா
பந்தள தேசம் வாழும் ராசாவோட புத்திரனே
வந்தாடும் சென்றாடும் வண்ணமலை வாசன் அல்லவா
கன்னிசாமி புதுசா மலையேறும் நாளப்பா
கருப்பு சட்டை போட்ட ஆத்திகன் நானப்பா
பொல்லாத தாயின் நோயை புலிபாலாலயே தீர்த்தவனே
நல்லார்க்கும் எல்லார்க்கும் நன்மை செய்யும் நேசன் அல்லவா
பள்ளிக்கட்டு சபரிமலைக்கு வந்தோமப்பா ஐயப்பா
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை கண்டோமப்பா ஐயப்பா
பள்ளிக்கட்டு சபரிமலைக்கு வந்தோமப்பா ஐயப்பா
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை கண்டோமப்பா ஐயப்பா
சொந்தமா வீடில்லாம சுப்பன் குப்பன் வாடுறான்
வருமானம் பத்தாமதான் எரிச்சல் கொண்டு வாழுறான்
சனமெல்லாம் மாறி போச்சு குறுக்கு வழியே காரணம்
புலி மேலே ஏறி நீயும் ஊருக்குள்ளே வரணும்
அடுத்தாண்டு தேர்தல் வரும் ஐயப்பா நீ நிக்க வேணும்
உன்னாட்சி பொன்னாச்சி வந்தாதான் நாடு பொழைக்கும்
பள்ளிக்கட்டு சபரிமலைக்கு வந்தோமப்பா ஐயப்பா
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை கண்டோமப்பா ஐயப்பா
பள்ளிக்கட்டு சபரிமலைக்கு வந்தோமப்பா ஐயப்பா
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை கண்டோமப்பா ஐயப்பா (5)

No comments:
Post a Comment