![]() |
| Nagathamman |
ஆலேலங்கும்மி ஆலேலங்கும்மி
ஆலேலங்கும்மி ஆலேலோ!
ஆலேலங்கும்மி ஆலேலங்கும்மி
ஆலேலங்கும்மி ஆலேலோ!
அம்மா வருவதை பாருங்கம்மா
அம்மா ஆடி வருவதை பாருங்கம்மா
ஆடி வருகிற நாகாத்தம்மனுக்கு ஆனந்த கும்மி அடிபோமம்மா
கும்பம் வருவதை பாருங்கம்மா
கும்பம் குலுங்கி வருவதை பாருங்கம்மா
குலுங்கி வருகிற நாகத்தம்மைக்கு குனிந்து கும்மி அடிபோமம்மா
அங்கு பனை படர்வதை பாருங்கம்மா
பனை பத்தி படர்வதை பாருங்கம்மா
பணகொடி போல நகத்தம்மைக்கு பல் வரிசைய பாருங்கம்மா
ஆணை வருவதை பாருங்கம்மா
ஆணை அசைஞ்சு வருவதை பாருங்கம்மா
ஆணை மேல் அமரும் நாகாத்தம்மனுக்கு அட்டிகை மின்னுவதை பாருங்கம்மா
ஒட்டகம் வருவதை பாருங்கம்மா
ஒட்டகம் ஓடி வருவதை பாருங்கம்மா
ஒட்டகம் மேல் இருக்கும் நாகத்தம்மைக்கு ஒய்யார கொண்டைய பாருங்கம்மா
குதிரை வருவதை பாருங்கம்மா
குதிரை குதிச்சு வருவதை பாருங்கம்மா
குதிரை மேல் இருக்கும் நாகாத்தம்மனுக்கு கொலுசு மின்னுவதை பாருங்கம்மா
பசு வருவதை பாருங்கம்மா
பசு பாய்ந்து வருவதை பாருங்கம்மா
பசுவை போல நாகத்தம்மைக்கு பணிந்து கும்மி அடிப்போமம்மா
அவ ஆடி வருவதை பாருங்கம்மா அம்மா அலுங்கி வருவதை பாருங்கம்மா
அலுங்கி வருகிற நாகத்தம்மைக்கு ஆனந்த கும்மி அடிப்போமம்மா
அவ நவதானிய முத்தெடுத்து நல் பயிறு முளைப்பாரி
நல்லதொரு அம்மையவள் நலிந்து கும்மி அடிப்போமம்மா
தங்க குடம் மிண்ணிவரும் அவ தாயவளே நாகத்தம்மா
அவ தவழ்ந்த ஊரு மேட்டூரிலே தணிந்து கும்மி அடிப்போமம்மா
அவ ஆடிவாரா பாடிவாரா எங்க நாகத்தம்மா
அவ ஆனந்தம்மா குலவையிட்டா எங்க நாகத்தம்மா
அவ மக்களையும் வாழவைக்க மஹமாயி வாரா
அவ மாந்தோப்பில் குடியிருக்கும் எங்க நாகாத்தம்மா
ஏ முளைப்பாரி வளர்த்தல்லவோ எங்க நாகத்தம்மா
வாராலே நாகாத்தம்மா எங்க நாகத்தம்மா
அவ ஆடிவாரா பாடிவாரா எங்க நாகத்தம்மா
அவ ஆனந்தம்மா குலவையிட்டா எங்க நாகத்தம்மா
ஏ வீரியமா ஓடி வாரா எங்க நாகத்தம்மா
அவ வீதி உலா இறங்கி வாரா எங்க நாகத்தம்மா
அவ சிங்க நல்ல நடை போட்டு எங்க நாகத்தம்மா
அவ சிறுச்சி இறங்கி ஓடி வாரா எங்க நாகத்தம்மா
இந்த மதுரா நல்ல மேட்டூரில் எங்க நாகத்தம்மா
அவ மங்கலமாய் அமர்ந்தாளே எங்க நாகத்தம்மா
ஆலேலங்கும்மி ஆலேலங்கும்மி
ஆலேலங்கும்மி ஆலேலோ!
ஆலேலங்கும்மி ஆலேலங்கும்மி
ஆலேலங்கும்மி ஆலேலோ!

No comments:
Post a Comment