Friday, December 20, 2024

Raksha Raksha jegan matha tamil lyrics | ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா சர்வ சக்தி ஜெயதுர்கா

ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா சர்வ சக்தி ஜெயதுர்கா

ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா சர்வ சக்தி ஜெயதுர்கா

மங்கள வாரம் சொல்லிட வேண்டும்

மங்கள கண்டிகை ஸ்லோகம் இதை

ஒன்பது வாரம் சொல்லுவதாலே

உமையவள் திருவருள் சேரும்

ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா சர்வ சக்தி ஜெயதுர்கா

ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா சர்வ சக்தி ஜெயதுர்கா

படைப்பவள் அவளே காப்பவள் அவளே

அழிப்பவள் அவளே சக்தி அபயம்

என்று அவளை சரண் புகுந்தாலே

அடைக்கலம் அவளே சக்தி

ஜெய ஜெய சங்கரி கௌரி மனோகரி

அபயம் அளிப்பவள் அம்பிகை பைரவி

சிவ சிவ சங்கரி சக்தி மஹேஸ்வரி

திருவருள்தருவாள் தேவி திருவருள் தருவாள் தேவி

ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா சர்வ சக்தி ஜெயதுர்கா

ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா சர்வ சக்தி ஜெயதுர்கா

கருணையில் ககை கண்ணணின் தங்கை

கடைக்கண் திறந்தால் போதும்

வருகின்ற யோகம் வளர்பிறை யாகும்

அருள்மழை பொழிவாள் நாளும்

நீலநிறத்தோடு ஞாலம் அளந்தவள்

காளி எனத் திரிசூலம் எடுத்தவள்

பக்தருக்கெல்லாம் பாதை வகுத்தவள்

நாமம் சொன்னால் நன்மை தருபவள்

நாமம் சொன்னால் நன்மை தருபவள்

ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா சர்வ சக்தி ஜெயதுர்கா

ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா சர்வ சக்தி ஜெயதுர்கா…

No comments:

Post a Comment

Popular Post