Friday, December 20, 2024

jeye jeya devi tamil Lyrics | ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்

 





ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்

ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்

துர்க்கையம்மனை துதித்தால் என்றும் துன்பம் பறந்தோடும்

தர்மம் காக்கும் தாயாம் அவளை தரிசனம் கண்டால் போதும்

கர்ம வினைகளும் போகும் சர்வமங்களம் கூடும் (ஜெய ஜெய தேவி) 

பொற்கரங்கள் பதினெட்டும் நம்மை சுற்றிவரும் பகை விரட்டும்

நெற்றியிலே குங்குமப் பொட்டு வெற்றிப் பாதையைக் காட்டும்

ஆயிரம் கரங்கள் உடையவளே ஆதி சக்தி அவள் பெரியவளே ஆயிரம் நாமங்கள் கொண்டவளே தாய் போல் நம்மை காப்பவளே (ஜெய ஜெய தேவி)

சங்கு சக்கரமும் வில்லும் அம்பும் மின்னும் வாளும் வேலும் சூலமும்

தங்க கைகளில் தாங்கி நிற்பாள் அம்மா…..

சிங்கத்தின் மேல் அவள் வீற்றிருப்பாள் திங்களை முடிமேல் சூடி நிற்பாள்

மங்கள வாழ்வும் தந்திடுவாள் மங்கையர்கரசியும்

அவளே அங்கையர்க்கண்ணியும் அவளே

ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்

ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்

கனக துர்கா தேவி சரணம் கனக துர்கா தேவி சரணம்...

No comments:

Post a Comment

Popular Post