Sunday, December 15, 2024

Vaarale Vaarale Mutharamma Tamil Lyrics | வாராலே வாராலே முத்தாரம்மா Lyrics Tamil

வாராலே வாராலே முத்தாரம்மா எங்க வேஷம் கட்டும் அழகை பாத்து

வேஷம் கட்டும் அழகை பாத்து  அவ வேண்டும் வரத்தை தருவாலம்மா

நாம  வேண்டும் வரத்தை தருவாலம்மா

வாராலே வாராலே முத்தாரம்மா எங்க வேஷம் கட்டும் அழகை பாத்து

வேஷம் கட்டும் அழகை பாத்து  அவ வேண்டும் வரத்தை தருவாலம்மா

குலசை நகரின் எல்லையிலே தாயி சூலம் ஏந்தி வாராலம்மா

காளி ரூபம் தானெடுத்து தாயி தயவு காட்ட வாராலம்மா

தாயி தயவு காட்ட வாராலம்மா

வாராலே வாராலே முத்தாரம்மா எங்க வேஷம் கட்டும் அழகை பாத்து

வேஷம் கட்டும் அழகை பாத்து  அவ வேண்டும் வரத்தை தருவாலம்மா

கையில் காப்பு கட்டிவிட்டோம் தாயி எம்மை காத்து நிற்பாய் அம்மா 

தசரா நோன்பு கொண்டிருக்கும் தாயி தரிசனத்தை காட்டிடம்மா 

உன் தரிசனத்தை காட்டிடம்மா 

வாராலே வாராலே முத்தாரம்மா எங்க வேஷம் கட்டும் அழகை பாத்து

வேஷம் கட்டும் அழகை பாத்து  அவ வேண்டும் வரத்தை தருவாலம்மா

புரட்டாசியிலே வண்டி கட்டி அம்மா ஆசி பெறவே வந்தோம் அம்மா

 புரட்டாசியிலே வண்டி கட்டி உந்தன்  ஆசி பெறவே வந்தோம் அம்மா 

மஞ்சள் வாசம் பொங்கப் பொங்க நாங்க மகிழ்ந்து ஆடி வந்தோம் அம்மா 

நாங்க மகிழ்ந்து ஆடி வந்தோம் அம்மா

வாராலே வாராலே முத்தாரம்மா எங்க வேஷம் கட்டும் அழகை பாத்து

வேஷம் கட்டும் அழகை பாத்து  அவ வேண்டும் வரத்தை தருவாலம்மா

ஆயிரம் கண்ணை திறந்து கொண்டு அவ ஆட்டம் ஆடி வாராலம்மா

ஆலயத்தை நாடினோர்க்கு அவ ஆதாயத்தை தருவாலம்மா 

நல்ல ஆதாயத்தை தருவாலம்மா 

வாராலே வாராலே முத்தாரம்மா எங்க வேஷம் கட்டும் அழகை பாத்து

வேஷம் கட்டும் அழகை பாத்து  அவ வேண்டும் வரத்தை தருவாலம்மா

துஷ்டர் எல்லாம் தூர ஓட திரிசூலம் ஏந்தும் முத்தாரம்மா 

தூய்மை உள்ளம் கொண்டவரை தன் மனதில் ஏந்தும் முத்தாரம்மா 

எங்க மனசில் நெறஞ்ச முத்தாரம்மா 

வாராலே வாராலே முத்தாரம்மா எங்க வேஷம் கட்டும் அழகை பாத்து

வேஷம் கட்டும் அழகை பாத்து  அவ வேண்டும் வரத்தை தருவாலம்மா

அன்பை பொழியும் அம்பிகையே நீ அஞ்சு லோக அதிபதியே 

பஞ்ச பூதம் கட்டி ஆளும் அந்த ஞானமூர்த்தி  ஈஸ்வரியே 

சிவ பார்வதி தாயே முத்தாரம்மா 

வாராலே வாராலே முத்தாரம்மா எங்க வேஷம் கட்டும் அழகை பாத்து

முத்து நிறத்து முத்தாரம்மா எங்க சொத்து பத்தே நீதானம்மா  

ஆடும் கரகம் கொண்டு வந்தோம் நீ அடி எடுத்து வந்திடம்மா  

நீ அடி எடுத்து வந்திடம்மா  

வாராலே வாராலே முத்தாரம்மா எங்க வேஷம் கட்டும் அழகை பாத்து

வேஷம் கட்டும் அழகை பாத்து  அவ வேண்டும் வரத்தை தருவாலம்மா

நஞ்சை புஞ்சை காத்திருக்கு நீ மஞ்ச வெயிலை நீக்கிடம்மா 

நவயுகத்தின் நாயகியே நீ நல்ல மழையை பெய்திடம்மா 

நீ நல்ல மழையை பெய்திடம்மா 

வாராலே வாராலே முத்தாரம்மா எங்க வேஷம் கட்டும் அழகை பாத்து

வேஷம் கட்டும் அழகை பாத்து  அவ வேண்டும் வரத்தை தருவாலம்மா

காலம் எல்லாம் உன் பெயரை நல்ல வேதமாக சொன்னோம் அம்மா 

காணிக்கைகள் கொண்டு வந்து

காணிக்கைகள் கொண்டு வந்து

உன் காலடியில்  வைத்தோம் அம்மா 

உன் காலடியில்  வைத்தோம் அம்மா 

எங்க கனவை நெனவா செய்திடம்மா 

வாராலே வாராலே முத்தாரம்மா எங்க வேஷம் கட்டும் அழகை பாத்து

ஓங்காரத்தில் காளியம்மா நீ ஆங்காரத்தில் துர்கையம்மா

தாயே என்று சொல்லிவிட்டால் நீ தயவு காட்டும் சக்தி அம்மா 

எங்க மனசு உன்னை சுத்தி அம்மா 

வாராலே வாராலே முத்தாரம்மா எங்க வேஷம் கட்டும் அழகை பாத்து

வேஷம் கட்டும் அழகை பாத்து  அவ வேண்டும் வரத்தை தருவாலம்மா

சிவனின் பாதி ஆனவளே எங்க சிகர ஜோதி ஆனவளே

சிவனின் பாதி ஆனவளே எங்க சிகர ஜோதி ஆனவளே 

சிரமம்  இல்லா வாழ்வு வாழ நீ சிறகு ஓட்டு முத்தாரம்மா 

நீ சிறகு ஓட்டு முத்தாரம்மா 

வாராலே வாராலே முத்தாரம்மா எங்க வேஷம் கட்டும் அழகை பாத்து

வேஷம் கட்டும் அழகை பாத்து  அவ வேண்டும் வரத்தை தருவாலம்மா

உலகம் போற்றும் உத்தமியே எங்க உயிரை காக்கும் சங்கரியே

 உன்னை தவிர எங்களுக்கு ஒரு காவல் ஏது முத்தாரம்மா 

எம்மை காத்து அருள வாடியம்மா 

வாராலே வாராலே முத்தாரம்மா எங்க வேஷம் கட்டும் அழகை பாத்து

நாங்கள் ஏத்தும் கற்பூரத்தில் தாயே கண்மலர்ந்து பார்த்தாய் அம்மா

நாங்கள் ஏத்தும் கற்பூரத்தில் நீ கண்மலர்ந்து பார்த்தாய் அம்மா 

சாம்பிராணி வாசத்திலே எங்க சங்கரியே வந்திடம்மா 

எங்க சங்கரியே வந்திடம்மா 

வாராலே வாராலே முத்தாரம்மா எங்க வேஷம் கட்டும் அழகை பாத்து

வாராலே வாராலே முத்தாரம்மா எங்க வேஷம் கட்டும் அழகை பாத்து

வேஷம் கட்டும் அழகை பாத்து  அவ வேண்டும் வரத்தை தருவாலம்மா

வாராலே வாராலே முத்தாரம்மா எங்க வேஷம் கட்டும் அழகை பாத்து

No comments:

Post a Comment

Popular Post