Sunday, December 29, 2024
Gokulathil pasukalellam tamil lyrics | கோகுலத்தில் பசுக்கள் எல்லாம்
கோகுலத்தில் பசுக்கள் எல்லாம்
கோபாலன் குழலைக் கேட்டு
நாலுபடி பால் கறக்குது இராமாரி!
அந்த மோகனின் பேரைச் சொல்லி
மூடி வைத்த பாத்திரத்தில்
மூன்று படி நெய் இருக்குது கிருஷ்ணாரி!
இராமாரி ஹரே கிருஷ்ணாரி – ஹரி ஹரி
இராமாரி ஹரே கிருஷ்ணாரி
கண்ணன் அவன் நடனமிட்டு
காளிந்தியில் வென்ற பின்னால்
தண்ணிப் பாம்பில் நஞ்சுமில்லை இராமாரி!
அவன் கனி இதழில் பால் கொடுத்த
பூதகியைக் கொன்ற பின்னால்
கன்னியர் பால் வஞ்சமில்லை கிருஷ்ணாரி!
இராமாரி ஹரே கிருஷ்ணாரி – ஹரி ஹரி
இராமாரி ஹரே கிருஷ்ணாரி
குளத்தில் முங்கிக் குளிக்கையிலே
கோவிந்தன் பெயரைச் சொன்னால்
கழுத்தில் உள்ள தாலி நிக்குது இராமாரி!
சேலை திருத்தும் போது அவன் பெயரை
ஸ்ரீரங்கா என்று சொன்னால்
அழுத்தமான சுகம் கிடைக்குது கிருஷ்ணாரி!
இராமாரி ஹரே கிருஷ்ணாரி – ஹரி ஹரி
இராமாரி ஹரே கிருஷ்ணாரி
படிப்படியாய் மலையில் ஏறி
பக்தி செய்தால் துன்பம் எல்லாம்
பொடிப் பொடியாய் நொறுங்குதடி இராமாரி!
அடி படிப்பில்லாத ஆட்கள் கூட
பாதத்திலே போய் விழுந்தால்
வேதத்திற்கே பொருள் விளங்குது கிருஷ்ணாரி!
இராமாரி ஹரே கிருஷ்ணாரி – ஹரி ஹரி
இராமாரி ஹரே கிருஷ்ணாரி
kanni saamy puthusa malyerum naalappa lyrics tamil | கன்னிசாமி புதுசா மலையேறும் நாளப்பா
பள்ளிக்கட்டு சபரிமலைக்கு வந்தோமப்பா ஐயப்பா
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை கண்டோமப்பா ஐயப்பா
கன்னிசாமி புதுசா மலையேறும் நாளப்பா
கருப்பு சட்டை போட்ட ஆத்திகன் நானப்பா
கன்னிசாமி புதுசா மலையேறும் நாளப்பா
கருப்பு சட்டை போட்ட ஆத்திகன் நானப்பா
பந்தள தேசம் வாழும் ராசாவோட புத்திரனே
வந்தாடும் சென்றாடும் வண்ணமலை வாசன் அல்லவா
கன்னிசாமி புதுசா மலையேறும் நாளப்பா
கருப்பு சட்டை போட்ட ஆத்திகன் நானப்பா
பொல்லாத தாயின் நோயை புலிபாலாலயே தீர்த்தவனே
நல்லார்க்கும் எல்லார்க்கும் நன்மை செய்யும் நேசன் அல்லவா
பள்ளிக்கட்டு சபரிமலைக்கு வந்தோமப்பா ஐயப்பா
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை கண்டோமப்பா ஐயப்பா
பள்ளிக்கட்டு சபரிமலைக்கு வந்தோமப்பா ஐயப்பா
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை கண்டோமப்பா ஐயப்பா
சொந்தமா வீடில்லாம சுப்பன் குப்பன் வாடுறான்
வருமானம் பத்தாமதான் எரிச்சல் கொண்டு வாழுறான்
சனமெல்லாம் மாறி போச்சு குறுக்கு வழியே காரணம்
புலி மேலே ஏறி நீயும் ஊருக்குள்ளே வரணும்
அடுத்தாண்டு தேர்தல் வரும் ஐயப்பா நீ நிக்க வேணும்
உன்னாட்சி பொன்னாச்சி வந்தாதான் நாடு பொழைக்கும்
பள்ளிக்கட்டு சபரிமலைக்கு வந்தோமப்பா ஐயப்பா
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை கண்டோமப்பா ஐயப்பா
பள்ளிக்கட்டு சபரிமலைக்கு வந்தோமப்பா ஐயப்பா
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை கண்டோமப்பா ஐயப்பா (5)
Ayarpaadi Maaligaiyil Lyrics Tamil | ஆயர்பாடி மாளிகையில்
ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ
ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ
அவன் வாய் நிறைய மண்ணை உண்டு
ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ
பின்னலிட்ட கோபியரின் கன்னத்திலே கன்னமிட்டு
மன்னவன் போல் லீலை செய்தான் தாலேலோ
பின்னலிட்ட கோபியரின் கன்னத்திலே கன்னமிட்டு
மன்னவன் போல் லீலை செய்தான் தாலேலோ
அந்த மந்திரத்தில் அவன் உறங்க மயக்கத்திலே இவன் உறங்க
மண்டலமே உறங்குதம்மா ஆராரோ
மண்டலமே உறங்குதம்மா ஆராரோ
ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ
நாகபடம் மீதில் அவன் நர்த்தனங்கள் ஆடியதில்
தாகமெல்லாம் தீர்த்துகொண்டான் தாலேலோ
யாரவனை தூங்கவிட்டார் ஆராரோ
யாரவனை தூங்கவிட்டார் ஆராரோ
ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ
கண்ணனவன் தூங்கிவிட்டால் காசினியே தூங்கிவிடும்
அன்னையரே துயிலெழுப்ப வாரீரோ
கண்ணனவன் தூங்கிவிட்டால் காசினியே தூங்கிவிடும்
அன்னையரே துயிலெழுப்ப வாரீரோ
அவன் பொன்னழகை காண்பதர்க்கும்
கன்னியரே கோபியரே வாரீரோ
கன்னியரே கோபியரே வாரீரோ
ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ(2)
Vaalvumanaval durga Tamil Lyrics | வாழ்வுமானவள் துர்கா
வாக்குமானவள்
வானில் நின்றவள்
இந்த மண்ணில் வந்தனள்
தாழ்வு அற்றவள்
துர்கா தாயுமானவள்
தாபம் நீக்கியே
என்னைத் தாங்கும் துர்கையே
தேவி துர்கையே
ஜெய தேவி துர்கையே
தேவி துர்கையே
ஜெய தேவி துர்கையே
உலகையீன்றவள்
துர்கா உமையுமானவள்
உண்மையானவள்
எந்தன் உயிரைக் காப்பவள்
நிலவில் நின்றவள்
துர்கா நித்யையானவள்
நிலவி நின்றவள்
எந்தன் நிதியும் துர்கையே
தேவி துர்கையே
ஜெய தேவி துர்கையே
தேவி துர்கையே
ஜெய தேவி துர்கையே
செம்மையானவள்
துர்க்கா ஜெயமும் ஆனவள்
அம்மையானவள்
அன்பு தந்தையானவள்
இம்மையானவள்
துர்க்கா இன்பமானவள்
மும்மையானவள்
என்று முழுமை துர்கையே
தேவி துர்கையே
ஜெய தேவி துர்கையே
தேவி துர்கையே
ஜெய தேவி துர்கையே
துர்கா உடலுமானவள்
உலகமானவள்
எந்தன் உடமையானவள்
பயிருமானவள்
துர்கா படரும் கொம்பவள்
பண்பு பொங்கிட
என்னுள் பழுத்த துர்கையே
தேவி துர்கையே
ஜெய தேவி துர்கையே
தேவி துர்கையே
ஜெய தேவி துர்கையே
துன்பமற்றவள்
துர்கா துரிய வாழ்பவள்
துறையுமானவள்
இன்ப தோணியானவள்
அன்பு உற்றவள்
துர்கா அபயவீடவள்
நன்மை தங்கிட
என்னுள் நடக்கும் துர்கையே
தேவி துர்கையே
ஜெய தேவி துர்கையே
தேவி துர்கையே
ஜெய தேவி துர்கையே
குருவுமானவள்
துர்கா குழந்தையானவள்
குலமுமானவள்
திருவுமானவள்
திரிசூலி மாயவள்
திருநீற்றில் நின்றிட
என்னுள் திகழும் துர்கையே
தேவி துர்கையே
ஜெய தேவி துர்கையே
தேவி துர்கையே
ஜெய தேவி துர்கையே
ராகு தேவனின்
பெரும் பூஜை ஏற்றவள்
ராகு நேரத்தில்
என்னைத் தேடி வருபவள்
ராகு காலத்தில்
எந்தன் தாயை வேண்டினேன்
ராகு துர்க்கையே
என்னைக் காக்கும் துர்கையே
தேவி துர்கையே
ஜெய தேவி துர்கையே
தேவி துர்கையே
ஜெய தேவி துர்கையே
கன்னி துர்கையே
இதயக் கமல துர்கையே
கருணை துர்கையே
வீர சுகன துர்கையே
அன்னை துர்கையே
என்றும் அருளும் துர்கையே
அன்பு துர்கையே
ஜெய துர்கை துர்கையே
தேவி துர்கையே
ஜெய தேவி துர்கையே
தேவி துர்கையே
Friday, December 20, 2024
jeye jeya devi tamil Lyrics | ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்
ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்
துர்க்கையம்மனை துதித்தால் என்றும் துன்பம் பறந்தோடும்
தர்மம் காக்கும் தாயாம் அவளை தரிசனம் கண்டால் போதும்
கர்ம வினைகளும் போகும் சர்வமங்களம் கூடும் (ஜெய ஜெய தேவி)
நெற்றியிலே குங்குமப் பொட்டு வெற்றிப் பாதையைக் காட்டும்
ஆயிரம் கரங்கள் உடையவளே ஆதி சக்தி அவள் பெரியவளே ஆயிரம் நாமங்கள் கொண்டவளே தாய் போல் நம்மை காப்பவளே (ஜெய ஜெய தேவி)
சங்கு சக்கரமும் வில்லும் அம்பும் மின்னும் வாளும் வேலும் சூலமும்
தங்க கைகளில் தாங்கி நிற்பாள் அம்மா…..
சிங்கத்தின் மேல் அவள் வீற்றிருப்பாள் திங்களை முடிமேல் சூடி நிற்பாள்
மங்கள வாழ்வும் தந்திடுவாள் மங்கையர்கரசியும்
அவளே அங்கையர்க்கண்ணியும் அவளே
ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்
ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்
கனக துர்கா தேவி சரணம் கனக துர்கா தேவி சரணம்...
Raksha Raksha jegan matha tamil lyrics | ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா சர்வ சக்தி ஜெயதுர்கா
ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா சர்வ சக்தி ஜெயதுர்கா
ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா சர்வ சக்தி ஜெயதுர்கா
மங்கள வாரம் சொல்லிட வேண்டும்
மங்கள கண்டிகை ஸ்லோகம் இதை
ஒன்பது வாரம் சொல்லுவதாலே
உமையவள் திருவருள் சேரும்
ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா சர்வ சக்தி ஜெயதுர்கா
ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா சர்வ சக்தி ஜெயதுர்கா
படைப்பவள் அவளே காப்பவள் அவளே
அழிப்பவள் அவளே சக்தி அபயம்
என்று அவளை சரண் புகுந்தாலே
அடைக்கலம் அவளே சக்தி
ஜெய ஜெய சங்கரி கௌரி மனோகரி
அபயம் அளிப்பவள் அம்பிகை பைரவி
சிவ சிவ சங்கரி சக்தி மஹேஸ்வரி
திருவருள்தருவாள் தேவி திருவருள் தருவாள் தேவி
ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா சர்வ சக்தி ஜெயதுர்கா
ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா சர்வ சக்தி ஜெயதுர்கா
கருணையில் ககை கண்ணணின் தங்கை
கடைக்கண் திறந்தால் போதும்
வருகின்ற யோகம் வளர்பிறை யாகும்
அருள்மழை பொழிவாள் நாளும்
நீலநிறத்தோடு ஞாலம் அளந்தவள்
காளி எனத் திரிசூலம் எடுத்தவள்
பக்தருக்கெல்லாம் பாதை வகுத்தவள்
நாமம் சொன்னால் நன்மை தருபவள்
நாமம் சொன்னால் நன்மை தருபவள்
ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா சர்வ சக்தி ஜெயதுர்கா
ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா சர்வ சக்தி ஜெயதுர்கா…
Thursday, December 19, 2024
Karpoora Kaatukulla Tamil Lyrics | கற்பூர காட்டுக்குள்ள
கற்பூர காட்டுக்குள்ள ஒரு கன்னிப்பொண்ணு காத்திருக்கு
அந்த கன்னி பொண்ண காண்பதற்கு அட கன்னி சாமி கூட்டம் இருக்கு
கற்பூர காட்டுக்குள்ள ஒரு கன்னிப்பொண்ணு காத்திருக்கு
அந்த கன்னி பொண்ணு மனசுக்குள்ள ஒரு கண்ணாலம் அது இருக்கு
கற்பூர காட்டுக்குள்ள ஒரு கன்னிப்பொண்ணு காத்திருக்கு
சாமியே சரணம் ஐயப்பா
ஐயப்பா சரணம் சரணம் ஐயப்பா
சாமியே சரணம் ஐயப்பா
ஐயப்பா சரணம் சரணம் ஐயப்பா
சாமியே சரணம் ஐயப்பா
ஐயப்பா சரணம் சரணம் ஐயப்பா
கொடிக்கா வெத்தலை பறிச்சுக்கிட்டு அட மிடுக்கா நடந்திடு கன்னி சாமி
துடுக்கா எதையும் செய்யாதே உங்க துணையா வருவது குருசாமி
வெத்தலையை வாரி தூவு வெற்றி படி உந்தன் படி
மஞ்சப்பொடி வாரி தூவு மஞ்சமாதா எண்ணப்படி
மஞ்சமாதா மாளிகைபுரம் சாமி மகிமைக்கு ஒரு சிகரம்
கன்னிசாமி வாராதிங்கோ ஆமா ஜின் ஜின் ஜின் நமனம்
மஞ்சமாதா மாளிகைபுரம் சாமி மகிமைக்கு ஒரு சிகரம்
கன்னிசாமி வாராதிங்கோ ஆமா ஜின் ஜின் ஜின் நமனம்
கற்பூர காட்டுக்குள்ள ஒரு கன்னிப்பொண்ணு காத்திருக்கு ஆமா
கற்பூர காட்டுக்குள்ள ஒரு கன்னிப்பொண்ணு காத்திருக்கு
ஞான சம்பந்தர் அருளாலே உயிர் மீண்டும் பெற்றவள் பூம்பாவை
தனக்குயிர் தந்தவர் கையாலே ஒரு தாலியும் தர சொன்ன கதை போலே
ஆமா அவ எண்ணம் போல மஞ்சமாதா நெனைப்பாச்சு
சும்மா கிடந்த சங்கை ஊதி கெட்ட ஆண்டி பொழப்பாச்சு
பிரம்மச்சாரி எங்க சாமி மனச மாத்திக்க வேணுமடி
கன்னி சாமி நாங்க தாயி உன்ன கண்டு போக வந்தோம் தாயி
பிரம்மச்சாரி எங்க சாமி மனச மாத்திக்க வேணுமடி
கன்னி சாமி நாங்க தாயி உன்ன கண்டு போக வந்தோம் தாயி
கற்பூர காட்டுக்குள்ள ஒரு கன்னிப்பொண்ணு காத்திருக்கு
அந்த கன்னி பொண்ண காண்பதற்கு அட கன்னி சாமி கூட்டம் இருக்கு
கற்பூர காட்டுக்குள்ள ஒரு கன்னிப்பொண்ணு காத்திருக்கு
அந்த கன்னி பொண்ணு மனசுக்குள்ள ஒரு கண்ணாலம் அது இருக்கு
கற்பூர காட்டுக்குள்ள ஒரு கன்னிப்பொண்ணு காத்திருக்கு
சாமியே சரணம் ஐயப்பா
ஐயப்பா சரணம் சரணம் ஐயப்பா
சாமியே சரணம் ஐயப்பா
ஐயப்பா சரணம் சரணம் ஐயப்பா
சாமியே சரணம் ஐயப்பா
ஐயப்பா சரணம் சரணம் ஐயப்பா
Tuesday, December 17, 2024
Aduga Nadanam Adugave Sivan Tamil Lyrics | ஆடுக நடனம் ஆடுகவே ஹர ஹர சிவனே ஆடுகவே
ஆடுக நடனம் ஆடுகவே
ஹர ஹர சிவனே ஆடுகவே
ஆடுக நடனம் ஆடுகவே
ஹர ஹர சிவனே ஆடுகவே (2)
சிவகை லாசா பரமேசா
திரிபுரம் எறித்த நடராசா
பவபயம் போக்கும் பரமேசா
பனிமலை ஆளும் சர்வேசா (ஆடுக)
அறுகொடு தும்பை மலராட
அணிமணி மாலைகள் தானாட
பெருகிடும் கங்கை தலையாட
பிறைமதி யதுவும் உடனாட (ஆடுக)
சூலம் உடுக்கை சுழன்றாட
சூழும் கணங்கள் உடனாட
ஆலம் குடித்தோன் ஆடுகவே அடியார் மகிழ ஆடுகவே (ஆடுக)
ஆலவா யரசே சொக்கேசா
அவனியைக் காக்கும் பரமேசா
ஆலங்காட்டில் ஆடிடுவாய்
அரஹர சிவனே ஆடுகவே (ஆடுக)
திருக்கட வூரின் கடயீசா
தில்லையம் பதியில் நடராஜா
திருமுல்லை மாசில்லா மணியீசா
திருநடம் ஆடுக ஆடுகவே (ஆடுக)
மயிலைக் கபாலி ஈஸ்வரனே
மதுரையில் ஆடிய ஆட்டமென்ன
கயிலையில் ஆடிய ஆட்டமென்ன கால்மாறி ஆடுக ஆடுகவே (ஆடுக)
Monday, December 16, 2024
Lakshmi Vaarai En illame Tamil Lyrics | லக்ஷ்மி வாராய் என் இல்லமே
லக்ஷ்மி வாராய் என் இல்லமே
பாலாலி செல்வி வரலக்ஷ்மி வாராய் என் இல்லமே
லக்ஷ்மி வா நான் வாழ்ந்திடும் வீடு
சூரியன் ஆயிரம் சுடர்முடியோடு
சூச்சுமமான பேறு பதினாறு
சுந்தரி தாராய் துளசியினோடு
குங்கும பச்சை கஸ்தூரி
எங்கும் கோரூர் ஜனமே தூவி
தங்க நிறத்தை கங்கணம் பூட்டி
மங்களைத் தாராய் மஞ்சளில் ஆசி
நறுமண சந்தனம் தாம்பூலம் ஆரத்தி தூபம் சாம்பிராணி
திருமகளே உன் விருப்பம் யாவும்
ஒருமனதாக சமர்ப்பித்தோம்
மஞ்சள் அக்ஷதை பரிமள கந்தம்
பஞ்சவேல் வதனம் பூரணகும்பம்
செஞ்சுலக்ஷ்மி உன் ஆசைப்படி
கொஞ்சமளித்தோம் பாதமடி
குண்டுமல்லிகை செவ்வரளி
செண்டுடன் பாதிரி செண்பகமும்
கண்டு பறித்து சந்ததமே
கொண்டு பூஜித்தோம் உன் பதமே
ஆவணி மாத வளர்பிறையில்
ஆவணச் சுக்ர வாரமதில்
தேவர்கள் போற்றும் ஸ்ரீதேவி
சீருடை தொழுதோம் பூத்தூவி
Karpanai Endralum Tamil Lyrics | கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்
கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்
கந்தனே உன்னை மறவேன்
கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்
கந்தனே உன்னை மறவேன் – நீ
கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்
கந்தனே உன்னை மறவேன்
அற்புதமாகிய அருட்பெருஞ் சுடரே
அற்புதமாகிய அருட்பெருஞ் சுடரே
அற்புதமாகிய அருட்பெருஞ் சுடரே
அருமறை தேடிடும் கருணை என் கடலே
அருமறை தேடிடும் கருணை என் கடலே
கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்
கந்தனே உன்னை மறவேன்
நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே
நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே
நினைப்பதும் நிகழ்வதும் நின் செயலாலே
நினைப்பதும் நிகழ்வதும் நின் செயலாலே
கற்பதெல்லாம் உந்தன் கனிமொழியாலே
கற்பதெல்லாம் உந்தன் கனிமொழியாலே
காண்பதெல்லாம் உந்தன் கண்விழியாலே
காண்பதெல்லாம் உந்தன் கண்விழியாலே
கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்
கந்தனே உன்னை மறவேன்
கந்தனே உன்னை மறவேன்
கந்தனே உன்னை மறவேன்
Sivamayamaga Therigirathe Tamil Lyrics | சிவமயமாக தெரிகிறதே
ஐந்தான முகம் எதிரில்
அருள் பொழியுதே
அணலான மலை காண
மணம் குளிருதே
சிவமயமாக தெரிகிறதே
சிந்தையில் சிவயோகம் வருகிறதே
சிவமயமாக தெரிகிறதே
சிந்தையில் சிவயோகம் வருகிறதே
புவனங்கள் ஆளும் அண்ணாமலையே
புவனங்கள் ஆளும் அண்ணாமலையே
எனது விழிகளில் காணும் பொழுதிலே
மாறிடுதே மனம் ஊறிடுதே
அண்ணாமலையானே
எங்கள் அன்பில் கலந்தோனே
உண்ணாமுலை நாதா
எங்கள் உள்ளம் நிறைந்தோனே அண்ணாமலையானே
எங்கள் அன்பில் கலந்தோனே
உண்ணாமுலை நாதா
எங்கள் உள்ளம் நிறைந்தோனே
சிவமயமாக தெரிகிறதே
சிந்தையில் சிவயோகம் வருகிறதே
சிந்தையில் சிவயோகம் வருகிறதே
யுகம் நாண்கு தாண்டியே
முகம் வேறு காட்டியே
யகம் யாவும் ஆள்கின்ற
அருணாச்சலா
யுகம் நாண்கு தாண்டியே
முகம் வேறு காட்டியே
யகம் யாவும் ஆள்கின்ற
அருணாச்சலா
சத்தியம் நீதான்
சகலமும் நீதான்
நித்தியம் என்னில்
நிலைப்பவன் நீதான்
அருணாச்சலா உனை நாடினேன்
அருணாச்சலா உனை நாடினேன்
சிவ லீலை செய்யாமல்
சிறுஏனை ஆட்கொள்ள
சிறுதேனும் தயவோடு
அருள்வாயப்பா
சிறுதேனும் தயவோடு
அருள்வாயப்பா
அண்ணாமலையானே
எங்கள் அன்பில் கலந்தோனே
உண்ணாமுலை நாதா
எங்கள் உள்ளம் நிறைந்தோனே
அண்ணாமலையானே
எங்கள் அன்பில் கலந்தோனே
உண்ணாமுலை நாதா
எங்கள் உள்ளம் நிறைந்தோனே
சிவமயமாக தெரிகிறதே
சிந்தையில் சிவயோகம் வருகிறதே
சிந்தையில் சிவயோகம் வருகிறதே
முடி மீது தீபமாய்
மடி மீது ஜோதியாய்
அடிவாரம் வெம்மையாய்
உணை காண்கிறேன்
முடி மீது தீபமாய்
மடி மீது ஜோதியாய்
அடிவாரம் வெம்மையாய்
உணை காண்கிறேன்
தீயெனும் லிங்கம்
ஜோதியில் தங்கும்
பாய்ந்திடும் சுடராய்
வான்வெளி தொங்கும்
அருணாச்சலா உன் கோலமே
அருணாச்சலா உன் கோலமே
மனம் காண வர வேண்டும்
தினந்தோறும் வரம் வேண்டும்
மலையான நாதனே
அருள்வாயப்பா
மலையான நாதனே
அருள்வாயப்பா
அண்ணாமலையானே
எங்கள் அன்பில் கலந்தோனே
உண்ணாமுலை நாதா
எங்கள் உள்ளம் நிறைந்தோனே
அண்ணாமலையானே
எங்கள் அன்பில் கலந்தோனே
உண்ணாமுலை நாதா
எங்கள் உள்ளம் நிறைந்தோனே
சிவமயமாக தெரிகிறதே
சிந்தையில் சிவயோகம் வருகிறதே
சிவமயமாக தெரிகிறதே
சிந்தையில் சிவயோகம் வருகிறதே
புவனங்கள் ஆளும் அண்ணாமலையே
புவனங்கள் ஆளும் அண்ணாமலையே
எனது விழிகளில் காணும் பொழுதிலே
மாறிடுதே மனம் ஊறிடுதே
அண்ணாமலையானே
எங்கள் அன்பில் கலந்தோனே
உண்ணாமுலை நாதா
எங்கள் உள்ளம் நிறைந்தோனே
அண்ணாமலையானே
எங்கள் அன்பில் கலந்தோனே
உண்ணாமுலை நாதா
எங்கள் உள்ளம் நிறைந்தோனே
அண்ணாமலையானே
எங்கள் அன்பில் கலந்தோனே
உண்ணாமுலை நாதா
எங்கள் உள்ளம் நிறைந்தோனே
Sunday, December 15, 2024
நாகாத்தம்மன் கும்மி பாடல்
![]() |
| Nagathamman |
ஆலேலங்கும்மி ஆலேலங்கும்மி
ஆலேலங்கும்மி ஆலேலோ!
ஆலேலங்கும்மி ஆலேலங்கும்மி
ஆலேலங்கும்மி ஆலேலோ!
அம்மா வருவதை பாருங்கம்மா
அம்மா ஆடி வருவதை பாருங்கம்மா
ஆடி வருகிற நாகாத்தம்மனுக்கு ஆனந்த கும்மி அடிபோமம்மா
கும்பம் வருவதை பாருங்கம்மா
கும்பம் குலுங்கி வருவதை பாருங்கம்மா
குலுங்கி வருகிற நாகத்தம்மைக்கு குனிந்து கும்மி அடிபோமம்மா
அங்கு பனை படர்வதை பாருங்கம்மா
பனை பத்தி படர்வதை பாருங்கம்மா
பணகொடி போல நகத்தம்மைக்கு பல் வரிசைய பாருங்கம்மா
ஆணை வருவதை பாருங்கம்மா
ஆணை அசைஞ்சு வருவதை பாருங்கம்மா
ஆணை மேல் அமரும் நாகாத்தம்மனுக்கு அட்டிகை மின்னுவதை பாருங்கம்மா
ஒட்டகம் வருவதை பாருங்கம்மா
ஒட்டகம் ஓடி வருவதை பாருங்கம்மா
ஒட்டகம் மேல் இருக்கும் நாகத்தம்மைக்கு ஒய்யார கொண்டைய பாருங்கம்மா
குதிரை வருவதை பாருங்கம்மா
குதிரை குதிச்சு வருவதை பாருங்கம்மா
குதிரை மேல் இருக்கும் நாகாத்தம்மனுக்கு கொலுசு மின்னுவதை பாருங்கம்மா
பசு வருவதை பாருங்கம்மா
பசு பாய்ந்து வருவதை பாருங்கம்மா
பசுவை போல நாகத்தம்மைக்கு பணிந்து கும்மி அடிப்போமம்மா
அவ ஆடி வருவதை பாருங்கம்மா அம்மா அலுங்கி வருவதை பாருங்கம்மா
அலுங்கி வருகிற நாகத்தம்மைக்கு ஆனந்த கும்மி அடிப்போமம்மா
அவ நவதானிய முத்தெடுத்து நல் பயிறு முளைப்பாரி
நல்லதொரு அம்மையவள் நலிந்து கும்மி அடிப்போமம்மா
தங்க குடம் மிண்ணிவரும் அவ தாயவளே நாகத்தம்மா
அவ தவழ்ந்த ஊரு மேட்டூரிலே தணிந்து கும்மி அடிப்போமம்மா
அவ ஆடிவாரா பாடிவாரா எங்க நாகத்தம்மா
அவ ஆனந்தம்மா குலவையிட்டா எங்க நாகத்தம்மா
அவ மக்களையும் வாழவைக்க மஹமாயி வாரா
அவ மாந்தோப்பில் குடியிருக்கும் எங்க நாகாத்தம்மா
ஏ முளைப்பாரி வளர்த்தல்லவோ எங்க நாகத்தம்மா
வாராலே நாகாத்தம்மா எங்க நாகத்தம்மா
அவ ஆடிவாரா பாடிவாரா எங்க நாகத்தம்மா
அவ ஆனந்தம்மா குலவையிட்டா எங்க நாகத்தம்மா
ஏ வீரியமா ஓடி வாரா எங்க நாகத்தம்மா
அவ வீதி உலா இறங்கி வாரா எங்க நாகத்தம்மா
அவ சிங்க நல்ல நடை போட்டு எங்க நாகத்தம்மா
அவ சிறுச்சி இறங்கி ஓடி வாரா எங்க நாகத்தம்மா
இந்த மதுரா நல்ல மேட்டூரில் எங்க நாகத்தம்மா
அவ மங்கலமாய் அமர்ந்தாளே எங்க நாகத்தம்மா
ஆலேலங்கும்மி ஆலேலங்கும்மி
ஆலேலங்கும்மி ஆலேலோ!
ஆலேலங்கும்மி ஆலேலங்கும்மி
ஆலேலங்கும்மி ஆலேலோ!
onnam Padi Eduthu Tamil Lyrics | ஒன்னாம் படி எடுத்து
தன்னன்னா நாதினம் தன்னன்னா நாதினம்
தன்னன்னா நாதினம் தன்னானே
தன்னன்னா நாதினம் தன்னானே
தன்னன்னா நாதினம் தன்னன்னா நாதினம்
தன்னன்னா நாதினம் தன்னானே
தன்னன்னா நாதினம் தன்னானே
தன்னன்னா நாதினம் தன்னன்னா நாதினம்
தன்னன்னா நாதினம் தன்னானே
தன்னன்னா நாதினம் தன்னானே
தன்னன்னா நாதினம் தன்னன்னா நாதினம்
தன்னன்னா நாதினம் தன்னானே
தன்னன்னா நாதினம் தன்னானே
செந்தில் வடிவேலவரே சிந்து கவி பாட
பல சங்கதிகள் போட
முன்பு செய்த வினை ஓட
இங்கு தஞ்சமுகம் தங்க
வெள்ளி குஞ்சரங்கள் பாட
தன்னன்னா நாதினம் தன்னன்னா நாதினம்
தன்னன்னா நாதினம் தன்னானே
தன்னன்னா நாதினம் தன்னானே
தன்னன்னா நாதினம் தன்னன்னா நாதினம்
தன்னன்னா நாதினம் தன்னானே
தன்னன்னா நாதினம் தன்னானே
ஒன்னாம் படி எடுத்து ஒசந்த பூவா ஓர ஓரமா
பத்திரகாளியாம் கருப்ப சாமியாம்
பெத்தவர் தேவியாம் வல்லவர் சாமியாம்
முன்னோரையான பேச்சி ஆத்தாளா மாரியம்மாள
சித்திர கோபுரம் கட்டவே
சித்திர கோபுரம் கட்டவே
சித்திர கோபுரம் கட்டவே
ஆலாம்பண்ணைக்கு அழகு பூப்பூத்து
ஆத்தா வாராளாம் பூஞ்சோலைக்கு
ஆலாம்பண்ணைக்கு அழகு பூப்பூத்து
ஆத்தா வாராளாம் பூஞ்சோலைக்கு
தன்னன்னா நாதினம் தன்னன்னா நாதினம்
தன்னன்னா நாதினம் தன்னானே
தன்னன்னா நாதினம் தன்னானே
தன்னன்னா நாதினம் தன்னன்னா நாதினம்
தன்னன்னா நாதினம் தன்னானே
தன்னன்னா நாதினம் தன்னானே
ரெண்டாம் படி எடுத்து
இரத்தினகிளியாம் ஓர ஓரமா
பத்திரகாளியாம் கருப்ப சாமியாம்
பெத்தவர் தேவியாம் வல்லவர் சாமியாம்
முன்னோரையான பேச்சி ஆத்தாளா மாரியம்மாள
சித்திர கோபுரம் கட்டவே
சித்திர கோபுரம் கட்டவே
சித்திர கோபுரம் கட்டவே
ஆலாம்பண்ணைக்கு அழகு பூப்பூத்து
ஆத்தா வாராளாம் பூஞ்சோலைக்கு
ஆலாம்பண்ணைக்கு அழகு பூப்பூத்து
ஆத்தா வாராளாம் பூஞ்சோலைக்கு
தன்னன்னா நாதினம் தன்னன்னா நாதினம்
தன்னன்னா நாதினம் தன்னானே
தன்னன்னா நாதினம் தன்னானே
தன்னன்னா நாதினம் தன்னன்னா நாதினம்
தன்னன்னா நாதினம் தன்னானே
தன்னன்னா நாதினம் தன்னானே
மூணாம் படி எடுத்து முத்து
பல்லாக்காம் ஓர ஓரமா
பத்திரகாளியாம் கருப்ப சாமியாம்
பெத்தவர் தேவியாம் வல்லவர் சாமியாம்
முன்னோரையான பேச்சி ஆத்தாளா மாரியம்மாள
சித்திர கோபுரம் கட்டவே
சித்திர கோபுரம் கட்டவே
சித்திர கோபுரம் கட்டவே
ஆலாம்பண்ணைக்கு அழகு பூப்பூத்து
ஆத்தா வாராளாம் பூஞ்சோலைக்கு
ஆலாம்பண்ணைக்கு அழகு பூப்பூத்து
ஆத்தா வாராளாம் பூஞ்சோலைக்கு
தன்னன்னா நாதினம் தன்னன்னா நாதினம்
தன்னன்னா நாதினம் தன்னானே
தன்னன்னா நாதினம் தன்னானே
தன்னன்னா நாதினம் தன்னன்னா நாதினம்
தன்னன்னா நாதினம் தன்னானே
தன்னன்னா நாதினம் தன்னானே
நாலாம் படி எடுத்து நாகரத்தின ஓர ஓரமா
பத்திரகாளியாம் கருப்ப சாமியாம்
பெத்தவர் தேவியாம் வல்லவர் சாமியாம்
முன்னோரையான பேச்சி ஆத்தாளா மாரியம்மாள
சித்திர கோபுரம் கட்டவே
சித்திர கோபுரம் கட்டவே
சித்திர கோபுரம் கட்டவே
ஆலாம்பண்ணைக்கு அழகு பூப்பூத்து
ஆத்தா வாராளாம் பூஞ்சோலைக்கு
ஆலாம்பண்ணைக்கு அழகு பூப்பூத்து
ஆத்தா வாராளாம் பூஞ்சோலைக்கு
தன்னன்னா நாதினம் தன்னன்னா நாதினம்
தன்னன்னா நாதினம் தன்னானே
தன்னன்னா நாதினம் தன்னானே
தன்னன்னா நாதினம் தன்னன்னா நாதினம்
தன்னன்னா நாதினம் தன்னானே
தன்னன்னா நாதினம் தன்னானே
அஞ்சாம் படி எடுத்து
அஞ்சுவர்ணக்கிளி ஓர ஓரமா
பத்திரகாளியாம் கருப்ப சாமியாம்
பெத்தவர் தேவியாம் வல்லவர் சாமியாம்
முன்னோரையான பேச்சி ஆத்தாளா மாரியம்மாள
சித்திர கோபுரம் கட்டவே
சித்திர கோபுரம் கட்டவே
சித்திர கோபுரம் கட்டவே
ஆலாம்பண்ணைக்கு அழகு பூப்பூத்து
ஆத்தா வாராளாம் பூஞ்சோலைக்கு
ஆலாம்பண்ணைக்கு அழகு பூப்பூத்து
ஆத்தா வாராளாம் பூஞ்சோலைக்கு
தன்னன்னா நாதினம் தன்னன்னா நாதினம்
தன்னன்னா நாதினம் தன்னானே
தன்னன்னா நாதினம் தன்னானே
தன்னன்னா நாதினம் தன்னன்னா நாதினம்
தன்னன்னா நாதினம் தன்னானே
தன்னன்னா நாதினம் தன்னானே
ஆறாம் படி எடுத்து
அரும்பு மோதிரம் ஓர ஓரமா
பத்திரகாளியாம் கருப்ப சாமியாம்
பெத்தவர் தேவியாம் வல்லவர் சாமியாம்
முன்னோரையான பேச்சி ஆத்தாளா மாரியம்மாள
சித்திர கோபுரம் கட்டவே
சித்திர கோபுரம் கட்டவே
சித்திர கோபுரம் கட்டவே
ஆலாம்பண்ணைக்கு அழகு பூப்பூத்து
ஆத்தா வாராளாம் பூஞ்சோலைக்கு
ஆலாம்பண்ணைக்கு அழகு பூப்பூத்து
ஆத்தா வாராளாம் பூஞ்சோலைக்கு
தன்னன்னா நாதினம் தன்னன்னா நாதினம்
தன்னன்னா நாதினம் தன்னானே
தன்னன்னா நாதினம் தன்னானே
தன்னன்னா நாதினம் தன்னன்னா நாதினம்
தன்னன்னா நாதினம் தன்னானே
தன்னன்னா நாதினம் தன்னானே
ஏழாம் படி எடுத்து எசக்க பூவா ஓர ஓரமா
பத்திரகாளியாம் கருப்ப சாமியாம்
பெத்தவர் தேவியாம் வல்லவர் சாமியாம்
முன்னோரையான பேச்சி ஆத்தாளா மாரியம்மாள
சித்திர கோபுரம் கட்டவே
சித்திர கோபுரம் கட்டவே
சித்திர கோபுரம் கட்டவே
ஆலாம்பண்ணைக்கு அழகு பூப்பூத்து
ஆத்தா வாராளாம் பூஞ்சோலைக்கு
ஆலாம்பண்ணைக்கு அழகு பூப்பூத்து
ஆத்தா வாராளாம் பூஞ்சோலைக்கு
தன்னன்னா நாதினம் தன்னன்னா நாதினம்
தன்னன்னா நாதினம் தன்னானே
தன்னன்னா நாதினம் தன்னானே
தன்னன்னா நாதினம் தன்னன்னா நாதினம்
தன்னன்னா நாதினம் தன்னானே
தன்னன்னா நாதினம் தன்னானே
எட்டாம் படி எடுத்து
பட்டு சீலையாம் ஓர ஓரமா
பத்திரகாளியாம் கருப்ப சாமியாம்
பெத்தவர் தேவியாம் வல்லவர் சாமியாம்
முன்னோரையான பேச்சி ஆத்தாளா மாரியம்மாள
சித்திர கோபுரம் கட்டவே
சித்திர கோபுரம் கட்டவே
சித்திர கோபுரம் கட்டவே
ஆலாம்பண்ணைக்கு அழகு பூப்பூத்து
ஆத்தா வாராளாம் பூஞ்சோலைக்கு
ஆலாம்பண்ணைக்கு அழகு பூப்பூத்து
ஆத்தா வாராளாம் பூஞ்சோலைக்கு
தன்னன்னா நாதினம் தன்னன்னா நாதினம்
தன்னன்னா நாதினம் தன்னானே
தன்னன்னா நாதினம் தன்னானே
தன்னன்னா நாதினம் தன்னன்னா நாதினம்
தன்னன்னா நாதினம் தன்னானே
தன்னன்னா நாதினம் தன்னானே
கொட்டிய கையும் வலிச்சு போச்சு
நல்ல கொடி வளைவிகள் விட்டு போச்சு
கொட்டிய கையும் வலிச்சு போச்சு
நல்ல கொடி வளைவிகள் விட்டு போச்சு
நித்திரை வந்து நில் லாபம்
மறைக்குது உத்தரவு கொடு காளித்தாயே
நித்திரை வந்து நில் லாபம்
மறைக்குது உத்தரவு கொடு காளித்தாயே
தன்னன்னா நாதினம் தன்னன்னா நாதினம்
தன்னன்னா நாதினம் தன்னானே
தன்னன்னா நாதினம் தன்னானே
தன்னன்னா நாதினம் தன்னன்னா நாதினம்
தன்னன்னா நாதினம் தன்னானே
தன்னன்னா நாதினம் தன்னானே
Vaarale Vaarale Mutharamma Tamil Lyrics | வாராலே வாராலே முத்தாரம்மா Lyrics Tamil
வாராலே வாராலே முத்தாரம்மா எங்க வேஷம் கட்டும் அழகை பாத்து
வாராலே வாராலே முத்தாரம்மா எங்க வேஷம் கட்டும் அழகை பாத்து
வேஷம் கட்டும் அழகை பாத்து அவ வேண்டும் வரத்தை தருவாலம்மா
நாம வேண்டும் வரத்தை தருவாலம்மா
வாராலே வாராலே முத்தாரம்மா எங்க வேஷம் கட்டும் அழகை பாத்து
வேஷம் கட்டும் அழகை பாத்து அவ வேண்டும் வரத்தை தருவாலம்மா
குலசை நகரின் எல்லையிலே தாயி சூலம் ஏந்தி வாராலம்மா
குலசை நகரின் எல்லையிலே தாயி சூலம் ஏந்தி வாராலம்மா
காளி ரூபம் தானெடுத்து தாயி தயவு காட்ட வாராலம்மா
தாயி தயவு காட்ட வாராலம்மா
வாராலே வாராலே முத்தாரம்மா எங்க வேஷம் கட்டும் அழகை பாத்து
வேஷம் கட்டும் அழகை பாத்து அவ வேண்டும் வரத்தை தருவாலம்மா
கையில் காப்பு கட்டிவிட்டோம் தாயி எம்மை காத்து நிற்பாய் அம்மா
கையில் காப்பு கட்டிவிட்டோம் தாயி எம்மை காத்து நிற்பாய் அம்மா
தசரா நோன்பு கொண்டிருக்கும் தாயி தரிசனத்தை காட்டிடம்மா
உன் தரிசனத்தை காட்டிடம்மா
வாராலே வாராலே முத்தாரம்மா எங்க வேஷம் கட்டும் அழகை பாத்து
வேஷம் கட்டும் அழகை பாத்து அவ வேண்டும் வரத்தை தருவாலம்மா
புரட்டாசியிலே வண்டி கட்டி அம்மா ஆசி பெறவே வந்தோம் அம்மா
புரட்டாசியிலே வண்டி கட்டி உந்தன் ஆசி பெறவே வந்தோம் அம்மா
மஞ்சள் வாசம் பொங்கப் பொங்க நாங்க மகிழ்ந்து ஆடி வந்தோம் அம்மா
நாங்க மகிழ்ந்து ஆடி வந்தோம் அம்மா
வாராலே வாராலே முத்தாரம்மா எங்க வேஷம் கட்டும் அழகை பாத்து
வேஷம் கட்டும் அழகை பாத்து அவ வேண்டும் வரத்தை தருவாலம்மா
ஆயிரம் கண்ணை திறந்து கொண்டு அவ ஆட்டம் ஆடி வாராலம்மா
ஆயிரம் கண்ணை திறந்து கொண்டு அவ ஆட்டம் ஆடி வாராலம்மா
ஆலயத்தை நாடினோர்க்கு அவ ஆதாயத்தை தருவாலம்மா
நல்ல ஆதாயத்தை தருவாலம்மா
வாராலே வாராலே முத்தாரம்மா எங்க வேஷம் கட்டும் அழகை பாத்து
வேஷம் கட்டும் அழகை பாத்து அவ வேண்டும் வரத்தை தருவாலம்மா
துஷ்டர் எல்லாம் தூர ஓட திரிசூலம் ஏந்தும் முத்தாரம்மா
துஷ்டர் எல்லாம் தூர ஓட திரிசூலம் ஏந்தும் முத்தாரம்மா
தூய்மை உள்ளம் கொண்டவரை தன் மனதில் ஏந்தும் முத்தாரம்மா
எங்க மனசில் நெறஞ்ச முத்தாரம்மா
வாராலே வாராலே முத்தாரம்மா எங்க வேஷம் கட்டும் அழகை பாத்து
வேஷம் கட்டும் அழகை பாத்து அவ வேண்டும் வரத்தை தருவாலம்மா
அன்பை பொழியும் அம்பிகையே நீ அஞ்சு லோக அதிபதியே
அன்பை பொழியும் அம்பிகையே நீ அஞ்சு லோக அதிபதியே
பஞ்ச பூதம் கட்டி ஆளும் அந்த ஞானமூர்த்தி ஈஸ்வரியே
பஞ்ச பூதம் கட்டி ஆளும் அந்த ஞானமூர்த்தி ஈஸ்வரியே
சிவ பார்வதி தாயே முத்தாரம்மா
வாராலே வாராலே முத்தாரம்மா எங்க வேஷம் கட்டும் அழகை பாத்து
முத்து நிறத்து முத்தாரம்மா எங்க சொத்து பத்தே நீதானம்மா
முத்து நிறத்து முத்தாரம்மா எங்க சொத்து பத்தே நீதானம்மா
ஆடும் கரகம் கொண்டு வந்தோம் நீ அடி எடுத்து வந்திடம்மா
நீ அடி எடுத்து வந்திடம்மா
வாராலே வாராலே முத்தாரம்மா எங்க வேஷம் கட்டும் அழகை பாத்து
வேஷம் கட்டும் அழகை பாத்து அவ வேண்டும் வரத்தை தருவாலம்மா
நஞ்சை புஞ்சை காத்திருக்கு நீ மஞ்ச வெயிலை நீக்கிடம்மா
நஞ்சை புஞ்சை காத்திருக்கு நீ மஞ்ச வெயிலை நீக்கிடம்மா
நவயுகத்தின் நாயகியே நீ நல்ல மழையை பெய்திடம்மா
நீ நல்ல மழையை பெய்திடம்மா
வாராலே வாராலே முத்தாரம்மா எங்க வேஷம் கட்டும் அழகை பாத்து
வேஷம் கட்டும் அழகை பாத்து அவ வேண்டும் வரத்தை தருவாலம்மா
காலம் எல்லாம் உன் பெயரை நல்ல வேதமாக சொன்னோம் அம்மா
காலம் எல்லாம் உன் பெயரை நல்ல வேதமாக சொன்னோம் அம்மா
காணிக்கைகள் கொண்டு வந்து
காணிக்கைகள் கொண்டு வந்து
உன் காலடியில் வைத்தோம் அம்மா
உன் காலடியில் வைத்தோம் அம்மா
எங்க கனவை நெனவா செய்திடம்மா
வாராலே வாராலே முத்தாரம்மா எங்க வேஷம் கட்டும் அழகை பாத்து
ஓங்காரத்தில் காளியம்மா நீ ஆங்காரத்தில் துர்கையம்மா
ஓங்காரத்தில் காளியம்மா நீ ஆங்காரத்தில் துர்கையம்மா
தாயே என்று சொல்லிவிட்டால் நீ தயவு காட்டும் சக்தி அம்மா
எங்க மனசு உன்னை சுத்தி அம்மா
வாராலே வாராலே முத்தாரம்மா எங்க வேஷம் கட்டும் அழகை பாத்து
வேஷம் கட்டும் அழகை பாத்து அவ வேண்டும் வரத்தை தருவாலம்மா
சிவனின் பாதி ஆனவளே எங்க சிகர ஜோதி ஆனவளே
சிவனின் பாதி ஆனவளே எங்க சிகர ஜோதி ஆனவளே
சிரமம் இல்லா வாழ்வு வாழ நீ சிறகு ஓட்டு முத்தாரம்மா
நீ சிறகு ஓட்டு முத்தாரம்மா
வாராலே வாராலே முத்தாரம்மா எங்க வேஷம் கட்டும் அழகை பாத்து
வேஷம் கட்டும் அழகை பாத்து அவ வேண்டும் வரத்தை தருவாலம்மா
உலகம் போற்றும் உத்தமியே எங்க உயிரை காக்கும் சங்கரியே
உலகம் போற்றும் உத்தமியே எங்க உயிரை காக்கும் சங்கரியே
உன்னை தவிர எங்களுக்கு ஒரு காவல் ஏது முத்தாரம்மா
உன்னை தவிர எங்களுக்கு ஒரு காவல் ஏது முத்தாரம்மா
எம்மை காத்து அருள வாடியம்மா
வாராலே வாராலே முத்தாரம்மா எங்க வேஷம் கட்டும் அழகை பாத்து
நாங்கள் ஏத்தும் கற்பூரத்தில் தாயே கண்மலர்ந்து பார்த்தாய் அம்மா
நாங்கள் ஏத்தும் கற்பூரத்தில் நீ கண்மலர்ந்து பார்த்தாய் அம்மா
சாம்பிராணி வாசத்திலே எங்க சங்கரியே வந்திடம்மா
எங்க சங்கரியே வந்திடம்மா